மேகாலயாவில் மாட்டு இறைச்சிக்கு தடை இல்லையாம்!! பாஜக.வுக்கு தேர்தல் ஜுரம்

சில்லாங்:

கிறஸ்தவர்களின் ஆதிக்கம் அதிகம் உள்ள மேகாலயா மாநில சட்டமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவுள்ளது. மாட்டு இறைச்சிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது என்ற காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டை அம்மாநில பாஜக மறுத்துள்ளது.

இது குறித்து பாஜ மாநில துணைத் தலைவர் லிங்டோ கூறுகையில், ‘‘இச்சட்டத்தில் மாட்டு இறைச்சி தடை செய்யப்பட்டுள்ளது என்று எந்த வியூகத்திலும் குறிப்பிடப்படவில்லை. நேபாளம் மற்றும் பங்களாதேஷ் நாடுகளில் காதிமல் திருவிழாவில் பலியிடுவதற்காக விலங்குகள் அதிக அளவில் கடத்தப்படுவதை தடுத்து அவற்றை காக்க வழிகாட்டு நெறிமுறைகளை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் அடிப்படையிலேயே இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவு கால்நடை இறைச்சி கூடங்கள், கால்நடை சந்தைகளை நெறிமுறை படுத்துவதற்கு மட்டுமே. அந்த சட்டத்தில் மாட்டு இறைச்சிக்கு தடை விதிக்கவில்லை. அவ்வாறு செய்தால் அது அரசியமலமைப்பின் சட்டப்படி உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றத்திற்கு எதிரானதாகும்’’ என்றார்.

மேகாலயா முதல்வர் முகுல் சங்மா சமீபத்தில் டில்லி சென்றார். அப்போது அவர் இந்த அறிவிப்பு திரும்ப பெற வேண்டும் என்று தெரிவித்திருந்தார். ‘‘வாழ்வாதார விஷயத்திலும், மக்களின் கலாச்சார உணர்வுகளைம் இது மீறும் செயலாகும். மாநில மலைவாழ் மக்களின் உணவு பழக்க வழக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது’’ என்று லிங்டோ தெரிவித்தார்.

கடந்த ஜூன் 12ம் தேதி மாநில சட்டமன்றத்தில் மத்திய அரசின் மாட்டு இறைச்சிக்கு தடை விதிக்கும் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் சி.என்.சங்மா பேசுகையில், ‘‘கால்நடை இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டதன் மூலம் மாநிலத்தில் உள்ள 5.7 லட்சம் குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள்’’ என்று தெரிவித்தார். .