பனாஜி,

கோவாவில் கடந்த ஆண்டு மாட்டிறைச்சி விற்பனை செய்ய தடை செய்யப்படுவதாக மீண்டும் கோவா அரசு அறிவித்தது. பின்னர் கடும் எதிர்ப்பு காரணமாக விலக்கு அளிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு கால்நடை சந்தைகளில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்கவும், வாங்கவும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. பின்னர் அது வாபஸ் வாங்கப்பட்டது.

 

இந்நிலையில், பாரதியஜனதா ஆட்சி செய்துவரும்  கோவாவிலும் மாட்டிறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. பின்ன்ர இதற்கு நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பு காரணமாக மத்திய அரசு சட்டத்த வாபஸ் பெற்றது.

ஆனால், கோவாவில் மாட்டிறைச்சி விற்பனை கடைகளில் ஆய்வு என்ற பெயரில் அவ்வப்போது சோதனைகள் நடத்தி தொல்லை கொடுத்து வருவதாக குற்றம்சாட்டப்பபட்டு வருகிறது. அரசின் கெடுபிடி காரணமாக மாட்டிறைச்சி வியாபாரிகள் துன்பத்திற்கு ஆளாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

சுற்றுலாதலமான கோவாவில் சுற்றுலா பயணிகளின் வருகை காரணமாக இறைச்சி விற்பனையும் களைகட்டும். அங்க மாட்டிறைச்சி, கறி, வறுவல், சூப்கள் போன்றவை அதிகமாக விற்பனையாகும்.

பொதுவாக மாட்டிறைச்சி மற்றும் அத்தியாவசிய புரதம் இருப்பதால் மாநிலத்தில் பெரும்பாலான கிறிஸ்வதர் மற்றும் முஸ்லீம் இல்லங்களில்  மாட்டிறைச்சி உண்பது வழக்கமாகும்.

கடந்த சில வாரங்களில், குறிப்பாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் கோவாவின் மாட்டிறைச்சி விற்பனை அமோகமாக நடைபெற்றது. அப்போது அதிகாரிகள் பல இடங்களில் சோதனைகளை மேற்கொண்டு தொல்லைகள் கொடுத்தனர்.

இதன் காரணமாக கொதிப்படைந்த மாட்டிறைச்சி வியாபாரிகள் நேற்றுகூடி, அரசுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்தனர்.

இதன் காரணமாக இன்றுமுதல் கோவாவில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளும் காலவரையின்றி மூடப்படும் என்று அறிவித்து உள்ளது.

அரசு அதிகாரிகளின் அத்துமீறல் மற்றும் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை கையில் எடுத்திருப்பதாக  வை  மாட்டு இறைச்சி வியாபாரிகள் சங்கம்  அறிவித்துள்ளது.

இதுகுறித்து  உள்ள குரேஷி மீட்  டிரேடர்ஸ் அசோஸியேஷின் தலைவர் மன்னா பிபரி கூறியதாவது,

மாட்டிறைச்சி வியாபாரிகளிடமும், கடைகளிலும் அரசு அதிகாரிகளின் கெடுபிடி காரணமாக தொல்லைகளை சந்தித்து வருகிறோம். ஆகவே அரசு தனது மாட்டிறைச்சி வியாபாரிகளுக்கு கொடுத்து வரும் தொல்லையை நிறுத்த வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது என்றும், இதன்  காரணமாக  கோவாவில் எந்தவொரு இடத்திலும் மாட்டிறைச்சி விற்பனை நடைபெறாது என்றும் இறைச்சியும் கிடைக்காது என்று கூறினார்.

அரசின் இதுபோன்ற தொல்லைகளுக்கு எதிராக போராடி  நாங்கள் சோர்வடைந்துள்ளோம் என்றும், எங்களை வியாபாரம் செய்ய பாஜ அரசு அனுமதிக்கவில்லை என்றும், அரசாங்க அதிகாரிகளும் எங்களை தொந்தரவு செய்கின்றனர்,” என்றார் பீபாரி.

இந்த விஷயத்தில் அரசு எங்களுக்கு உதவாதவரை மாட்டிறைச்சி கடை திறக்கப்படாது என்றும் அவர் மேலும் கூறி உள்ளார்.

 

மாநிலத்தின் 1.5 மில்லியன் மக்களில் 30% க்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவாவில் பாஜக அரசு ஆட்சியை பிடித்தும், மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்பனையை தடை செய்வதாக கடந்த ஆண்டு அறிவித்தது. இந்தியாவில் உள்ள  பிரபலமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றான  கோவாவில் வெளிநாட்டினர் மாட்டிறைச்சி விரும்புவதால், அரசின் தடை உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, மாட்டிறைச்சிக்க தடைவிதிக்கவில்லை என்று  கோவா மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் மனோகர் அஜ்கோன்கார் கூறியது குறிப்பிடத்தக்கது.