பென்ஷன் திட்டத்தில் சேருவோர் இறந்தால் குடும்பத்தினருக்கு பணம் கிடைக்காது : திட்ட அறிவிப்பு 

டில்லி

மைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தில் சேருவோர் இறந்தால் குடும்பத்தினருக்கு காப்பிடு கிடையாது என தெரிய வந்துள்ளது

சமீபத்தில் தாக்கல் செய்யபட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தில் தொழிலாளர்களை சேர்க்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.   ரூ.15000 க்கு குறைவாக மாத ஊதியம் பெறும் தொழிலாளர்கள் இத்திட்டத்தில் சேர முடியும்.    அவர்களிடம் இருந்து மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை பெறப்பட்டு 60 வயதுக்கு பிறகு மாதம் ரூ.3000 ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது.

பொதுவாக இவ்வாறு காப்பீட்டு திட்டத்தில் சேருவோர் மரணம் அடைய நேரிட்டால் அந்த ஓய்வூதியத்தில் ஒரு  பங்கு அவருடைய வாரிசுகளுக்கு அளிக்கப்படும் என்பதே வழக்கத்தில் உள்ள நெறிமுறை ஆகும்.   ஆனால் இந்த திட்டத்தில் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை.  மாறாக இந்த திட்டத்தில் சேருவோர் இறக்க நேரிட்டால் அவருடைய கணக்கில் உள்ள தொகை திட்டத்தின் பொது நிதியில் இணைக்கப்படும் என உள்ளது.

இது குறித்து பொருளாதார நிபுணர் ஜீன் டிரெஸ். “இத்தகைய அனைத்து ஓய்வூதிய திட்டத்திலும் சந்தாதாரர் மரணம் அடைந்தால் மீதமுள்ள தொகை அவரது மனைவிக்கு  போய் சேரும் என்னும் வழக்கம் உள்ளது.   ஒரு ஏழை தனது செலவுகளை குறைத்துக் கொண்டு இந்த திட்டத்தில் பணம் செலுத்துகிறார்.   அந்த பணத்தை அரசு சப்பிட நினைப்புது மிகவும் தவறாகும்.    அவர் மறைவுக்கு பின் அவரது சேமிப்பு குடும்பத்துக்கு பயன் தர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்துக்கு பல தொழிற்சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.    ஆர் எஸ் எஸ் தொழிற்சங்க பிரிவான பாரதிய மஸ்தூர் சங்க தலைவர் விர்ஜேஷ் உபாத்யாயா, “இந்த திட்ட விதிமுறை தவறானது.   இந்த திட்டத்தில் ஒரு தொழிலாளி சேர்த்து வைத்த தொகை அவர் இறப்புக்கு பிறகு வட்டியுடன் அவரது குடும்பத்தினருக்கு அளிக்கப்பட வெண்டும்.” என தெரிவித்துள்ளார்.

இதே கருத்தை கம்யூனிஸ்ட் தொழிற்சங்க தலைவர் பத்மநாபனும் தெரிவித்துள்ளார்.    ஏற்கனவே பிராவிடண்ட் ஃபண்ட் ஓய்வூதிய திட்டத்தில்  சேர்ந்து மரணமடைந்தோர் மரணம் அடைந்தால் அவர்களின் மைனர் குழந்தைகளுக்கு ஓய்வூதியத்தில் பாதி தொகை வழங்கப்படுவதை அவர் சுட்டிக் காட்டி உள்ளார்.