ஒடிசாவில் வரும் 10ம் தேதி முதல் 30ம் தேதி வரை பட்டாசுகள் வெடிக்க தடை விதிப்பு…!

புவனேஸ்வர்: கொரோனா பரவல் காரணமாக, ஒடிசாவில் வரும் 10ம் தேதி முதல் 30ம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

.நாடு முழுவதும் அடுத்த வாரம் முதல் தீபாவளி பண்டிகை களைகட்ட தொடங்கி விடும் என்று தெரிகிறது. கொரோனா தொற்றுகளுக்கு மத்தியில் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட மத்திய அரசு அறிவுரைகளை வழங்கி வருகிறது.

இந் நிலையில் ஒடிசா மாநிலத்தில் கொரோனா பரவல், குளிர்காலத்தை கருத்தில் கொண்டு பட்டாசுகளை வெடிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பட்டாசுகளை வெடிக்கும் போது, காற்றில் கலக்கும் துகள்களின் செறிவு அதிகரிப்பதால் குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களின் உடல் நிலையை பாதிக்கக்கூடும் என்று ஒடிசா பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. இந்த துகள்கள் கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு உகந்த நிலைமைகளை உருவாக்க வாய்ப்பு இருப்பதாக அம்மாநில சுகாதாரத் துறையினரும் தெரிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது