திஸ்பூர்: அஸ்ஸாம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி பிரசாரம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், சிஏஏ கொண்டு வரப்படாது, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2ஆயிரம் வழங்கப்படும் உள்பட 5  வாக்குறுதி வழங்கினார்.

அசாமில் 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக 47 தொகுதிகளுக்கு மார்ச் 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையட்டி, அங்கு வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்து அனல்பறக்கும் தேர்தல் பிரசாரம்  நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் ஏற்கனவே பாஜக ஆட்சி நடைபெற்று வரும்  நிலையில், அங்கு ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து 2 நாள் சுற்றுப்பயணமாக அங்கு சென்று பிரசாரம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி,  மாநிலத்தில் வேலை செய்யும்  தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ரூபாய் 351 தருவதாக பாஜக அரசு வாக்குறுதி தந்தது. ஆனால் கொடுத்தது என்னவோ 167 ரூபாய் தான்.

அசாம் மக்களுக்கு நாங்கள் 5 உத்தரவாதங்களை கொடுக்கிறோம். 

காங்கிரஸ்ஆட்சிக்கு வந்தால் தேயிலைத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு சம்பளம் 365 ரூபாய் வழங்கப்படும்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருப்போம்.

5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்.

ஒரு வீட்டிற்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.

குடும்ப தலைவிகளுக்கு 2000 ரூபாய் வழங்கப்படும்.

என்றவல், நான் நரேந்திர மோடி அல்ல; அதனால்,  நான் பொய் சொல்ல மாட்டேன். மேக் இன் இந்தியா பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார்; ஆனால் போன் சட்டைகளில் மேட் இன் சீனா என்று உள்ளது, அவர் குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்கு சாதமாக செயல்பட்டு வருகிறார் என்று கூறினார்.

ராகுல் அடிக்கடி தமிழகம் வந்து‘ தமிழமக்களை சந்தித்து வருவதால், திராவிட கட்சிகளின் இலவச தாக்கம் அவருக்குள் வந்துவிட்டது போலும்…