டில்லி:

ராகுல் காந்திக்கு மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

குஜராத் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்த நிலையில் ராகுல்காந்தி பேட்டி சில சேனல்களில் ஒளிபரப்பானது. இது விதி மீறிய செயல் என்று ஆணையத்துக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, பேட்டிகளை ஒளிபரப்பை உடனே நிறுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

மேலும், இந்த விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு குஜராத் தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டது. ராகுல் காந்தியின் பேட்டியை ஒளிபரப்பு செய்த மீடியாக்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது.

அத்துடன், பேட்டி அளித்த ராகுல் காந்தியிடம் விளக்கம் கேட்டு, அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. 18ம் தேதி மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே ஆமதாபாத்தில் பிரதமர் மோடி ஓட்டு போட பேரணியாக சென்றது குறித்து தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் கூறியது.

இப்போது ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை, 5 நாட்களில் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் மட்டும்தான் அனுப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.