ராஞ்சி:  ஜார்கண்ட்டில் இதுவரை பறவைக் காய்ச்சல் கண்டறியப்படவில்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாட்டின் பல மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் தாக்கம் பரவலாக அதிகரித்து வருகிறது. அதை தடுக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழுக்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. மொத்தம் 12 மாநிலங்களில் பறவைக் காயச்சல் கண்டறியப்பட்டுள்ளது.

இந் நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் இதுவரை பறவைக் காய்ச்சல் கண்டறியப்படவில்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை கூறி உள்ளதாவது:

மாநிலத்தில் இறந்த பறவைகள், பூங்கா மற்றும் காட்டில் உயிருடன் உள்ள பறவைகளின் மாதிரிகள் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இது வரை 4,353 பறவைகளின் மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எந்த மாதிரியிலும் பறவை காய்ச்சல் உறுதியாகவில்லை என்று தெரிவித்துள்ளது.