இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் மிகக் குறைவு – இரண்டாம் அலைக்கு வாய்ப்பில்லை!

புதுடெல்லி: இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு, 223 ‍பேர்களே கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதால், கொரோனாவின் இரண்டாம் அலைக்கு இந்தியாவில் வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் அகில இந்திய எண்ணிக்கை 3 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், அமெரிக்காவில் 10 லட்சம் பேருக்கு 21612 நோயாளிகளும், ரஷ்யாவில் 10 லட்சம் பேருக்கு 3513 நோயாளிகளும் உள்ளனர். இந்தியாவில் ஒரு நாளைக்கு 10 லட்சம் பேர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

இதுவரை, 160 மில்லியன் சாம்பிள்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி மாத மத்தியில், இந்தியாவில் ஒரேயொரு ஆய்வகத்தில் சோதனை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.