மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு ஒருபோதும் வாய்ப்பு இல்லை: கமல்ஹாசன் திட்டவட்டம்

மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு இனி ஒருபோதும் வாய்ப்பு இல்லை என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த கமல்ஹாசன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு வாய்ப்பே இல்லை என்பதைத்தான் பார்க்க முடிகிறது. வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்பதாக தெரியவில்லை. தமிழக மக்கள் குரல் அந்த சபையில் ஒலிக்க வேண்டும் என்பது தான் அனைவரின் கோரிக்கை. அது நடக்கும் என்று நம்புகிறேன்.

அடுத்த மத்திய அமைச்சரவை பட்டியலில் தமிழகத்திற்கு இடம் கிடைக்கும் என தமிழக அமைச்சர் மா.ஃபா பாண்டியராஜன் கூறியிருப்பதை தேர்தல் வாக்குறுதி போல் தான் பார்க்க வேண்டும். இதற்கு மேல் சொல்ல எதுவும் இல்லை” என்று தெரிவித்தார்.

கார்ட்டூன் கேலரி