சென்னை,

ஜினி, கமல் அரசியலுக்கு வந்தால் அவர்களால் 10 சதவிகிதத்திற்கு மேல் ஓட்டுக்கள் வாங்க முடியாது என்று நடிகர் கமலஹாசன் அண்ணன் சாருஹாசன் தெரிவித்து உள்ளார்.

மேலும் கமல்ஹாசனுக்கு முதலமைச்சராகும் வாய்ப்பு இல்லை என்றும் கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் கமல்ஹாசன் அண்ணன் சாருஹாசன் கமலின்  அரசியல் பிரவேசம் குறித்து அதிரடி கருத்துக்களை முன்வைத்தார்.

நடிகர் கமலஹாசன் சமீப காலமாக மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கருத்துக்களை கூறி, அரசியலுக்கு வருவேன் என்று கூறி உள்ளார்.  சினிமாவை தாண்டி அரசியலில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார்.

இவருக்கு நிறைய இளைஞர்கள்  தங்களது ஆதரவை காட்டி வருகின்றனர். இந்நிலையில் அவருடைய அண்ணன் கமலஹாசன் கூறியதாவது,

கமல்ஹாசன் ஒரு சிறந்த அறிவாளி. கெட்டிக்காரர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், குறிப்பிட்ட சின்னங்களுக்கு மட்டுமே வாக்களித்து பழக்கப்பட்டவர்கள் நமது தமிழக மக்கள், அதை விடுத்து புதியதாக ஒரு சின்னத்துக்கு வாக்களிக்க மாட்டார்கள்.  அவ்வளவு எளிதில் மக்கள் மாற மாட்டார்கள்.

மாநிலத்தில் உள்ள பெரிய கட்சிகளான அதிமுக, திமுக போன்ற கட்சிகளில் இணைந்து, அந்த கட்சிகளின் தலைவர்களோடு அவர் நெருக்கமாக இருந்து, படிப்படியாக அரசியலுக்கு வந்தி ருந்தால், அவரால் வெற்றி பெற சாத்தியம் உண்டு.

ஆனால், அவர் அப்படி செய்யாமல் நேரடியாக தனிக்கட்சி ஆரம்பித்தால் அவரால் வெற்றி பெற முடியாது.   கமல்ஹாசனால் நேரிடையாகவும்  முதல்வர் ஆக முடியாது. அதற்கு அவர் விரும்பவும் கூடாது.

தற்போதைய சூழலில் கமல்ஹாசனும், ரஜினியும் இணைந்து தேர்தலில் ஈடுபட்டாலே வெறும் 10 சதவீத ஓட்டுகள் மட்டுமே கிடைக்கும். என் கணிப்புகளின் படி, இருவருக்கும் வாக்களிக்கும் பங்கு, ஒன்றாக, 10% க்கும் குறைவாக இருக்கும். 90% வாக்குகள் அரசியலுக்கு போகும், சினிமாக்கு கிடைக்காது.

ஆனால் மாநில கட்சிகளான  திமுக, அதிமுக போன்ற கட்சிகளோடு இணைந்து தேர்தலை சந்தித்தால் கூட 25 சதவீத ஓட்டுகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.  ஆனாலும், தமிழகத்தில்  ஆட்சி அமைக்க 36 சதவீத ஓட்டுகள் தேவைப்படும். இதற்கு வாய்ப்பில்லை.

அதேவேளையில் ரஜினி, கமல் இருவரும் கட்சி ஆரம்பிப்பார்களா என்பதும் தனக்கு தெரியாது என்று கூறினார்.

 

தமிழ் சினிமாவில் தொழில்முயற்சியில் ஈடுபடும் அரசியல்வாதிகள், முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி. ராமச்சந்திரன், எம். கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோரை உள்ளடக்கியவர்கள்தான் எனறாலும் அவர்கள்மீதான கிரேஸ் இருந்தது. அப்படியிருந்தும் இரண்டு முறை முதல்வர் பதவியை ஜெயலலிதா தவறி விட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

சிலர், நீங்கள் ஏன் அரசியலுக்கு வரவில்லை? என ரஜினியிடம் கேட்கின்றனர். ஆனால், நீங்கள் ஏன் அரசியலுக்கு வந்தீர்கள்? என கமல்ஹாசனிடம் கேட்கின்றனர்.

இதிலேயே நமக்கு பதில் ஒளிந்திருக்கிறது. இதே நிலை  எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலும் இருந்தது.  சிவாஜி நன்றாக நடிக்கட்டும், ஆனால் எங்கள் அண்ணன் எம்.ஜி.ஆர்-தான் முதல்வர் என மக்கள் நினைத்தனர்.

கமலுக்கும் அப்படித்தான். அவர் நன்றாக நடிக்கட்டும். ஆனால், ரஜினிக்குதான் எங்கள் ஓட்டு என்றுதான் மக்கள் நினைப்பார்கள்.  ரஜினிக்கு உள்ள கவர்ச்சி கமல்ஹாசனுக்கு கிடையாது” என்றார்.

தற்போது தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகளில் அன்புமணி ராமதாஸ் மட்டுமே சிறந்தவர், அவரே தமிழகத்தின் முதல்வர் பதவிக்கு தகுதியானவர்.

இவ்வாறு அவர் கூறினார்.