இந்தியாவில் இணையதளச் சேவை முடங்காது: சைபர் கிரைம் அதிகாரி தகவல்

டில்லி:

ந்தியாவில் இணையதளச் சேவை முடங்க வாய்ப்பில்லை என்று இந்திய சைபர் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் இணையதளங்களை, தி இண்டர்நெட் கார்ப்பரேஷன் ஃபார் நேம்ஸ் அண்ட் நம்பர் (Internet Corporation For Assigned Names & Numbers) என அழைக்கப்படும் சர்வதேச இணையதள சேவை அமைப்பு நடத்தி வருகிறது. இந்த அமைப்பு ரஷ்யாவில் உள்ளது.  தற்போது வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருவதால்,  உலகளவில் அடுத்த 48 மணிநேரத்துக்கு இணையதள சேவை முடங்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தது.

இது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தியாவில் எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று இந்திய சைபர் கிரைம்  பாதுகாப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர் குல்ஷன் ராய் கூறி உள்ளார்.

ஊடகங்களில்  வரும் செய்தியைக் கண்டு பதற்றமடையத் தேவையில்லை என்றும் இந்தியாவில் இணையதளச் சேவை முடங்க வாய்ப்பில்லை” என்றும் கூறினார்.  இதன் காரணமாக இந்தியர்கள் சற்று நிம்மதி அடைந்து உள்ளனர்.