சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.91 காசுகளாகவும், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.53 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்ப்டடு வருகிறது. கடந்த 4 நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமலேயே இருந்து வருகிறது.

இந்நிலையில் இன்றைய விலை நிர்ணையம் குறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் ஒரு லிட்டர் ரூ.77.91 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றமின்றி லிட்டர் ரூ.69.53 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.