Random image

மீன்களில் ரசாயனக் கலப்பு இல்லை :  அமைச்சர் ஜெயகுமார் உறுதி

சென்னை

ஃபர்மலின் ரசாயனக் கலப்புள்ள மீன்கள் இல்லை என அமைச்சர் ஜெயகுமார் உறுதி அளித்துள்ளார்.

 

மீன்கள் கெடாமல் இருக்க ஃபார்மலின் ரசாயனக் கலவையில் மீன்கள் தோய்த்தெடுப்பதாக புகார்கள் எழுந்தன.   ஃபார்மலின் என்பது  இறந்தவர்களின் உடல் கெடாமல் இருக்க உபயோகிக்கப்படும் ஒருவகை ரசாயனம் ஆகும்.    இந்த ரசாயனம் கலந்த மீன்களை உண்போருக்கு புற்று நோய் தாக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், “மீன்கள் முழுமையாக சோதனைச்சாலையின் மூலம் சோதிக்கப்பட்டது.  எந்த மீன்களிலும் ஃபார்மலின் உள்ளிட்ட எந்த ஒரு ரசாயனக் கலப்பும் காணப்படவில்லை.   அதனால் மக்கள் தேவையின்றி பயபட வேண்டாம்.

தேவையற்ற வீண் வதந்திகளை பரப்பி மீனவர்களின் வாழ்வாதாரத்தோடு விளையாட வேண்டாம்.  தற்போது மீன்களின் தேவை அதிகமாக உள்ளது.  அவ்வாறு இருக்க யாராவது ஃபார்மலினை பயன்படுத்தி மீன்களை  பாதுகாத்து வைப்பார்களா?

மீன்கள் மீது ரசாயனம் கலந்துள்ளதாக சந்தேகம் உள்ளவர்கள் உடனடியா மீன் வள பல்கலைக் கழகத்தின் மூலம் ஆய்வு செய்யலாம்.   ஒரு வேளை மீன்களில் ரசாயனம் கலந்திருப்பது கண்டறியப்பட்டால் அதை செய்பவர்களுக்கு கடும் தண்டனை அளிக்கப்படும்” என கூறி உள்ளார்