6 மாதங்களில் எல்லையில் எந்த ஊடுருவலும் இல்லை: உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் பதில்

டெல்லி: 6 மாதங்களில் எல்லையில் எந்த ஊடுருவலும் இல்லை என்று உள் துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறி உள்ளார்.

லடாக் பகுதியில் சீன ராணுவத்தின் அத்துமீறல் காரணமாக இரு நாடுகள் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தைகளும் முன் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந் நிலையில், இந்திய சீன எல்லையில் 6 மாதங்களாக ஊடுருவல் சம்பவம் ஏற்படவில்லை என்று உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்து உள்ளார். 6 மாதங்களில் பாகிஸ்தான், சீனாவிலிருந்து ஊடுருவல் வழக்குகள் அதிகரித்துள்ளன என்பது உண்மையா என்ற கேள்விக்கு மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வ  அளித்துள்ள பதிலில் அவர் இவ்வாறு கூறி உள்ளார்.

அவர் மேலும் கூறி இருப்பதாவது: பிப்ரவரி, ஜூன் மாதங்களில் ஊடுருவல்  சம்பவங்கள் பதிவாகவில்லை. 4 பேர் மார்ச் மாதத்திலும், ஏப்ரலில் 24 பேரும், மே மாதத்தில் 8 பேரும், ஜூலையில் 11 பேரும் ஊடுருவி தோல்வி அடைந்து உள்ளனர். 6 மாதங்களில் இந்தியா-சீனா எல்லையில் ஊடுருவல் எதுவும் இல்லை என்று கூறினார்.

கார்ட்டூன் கேலரி