அமெரிக்கா – ரஷ்யா இடையே பனிப்போர் இல்லை : அமெரிக்க பேராசிரியர்

வாஷிங்டன்

மெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே பனிப்போர் இல்லை என அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டிபன் வால்ட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் இயங்கி வரும் ஜான் எஃப் கென்னடி கல்லூரியில் வெளியுறவுத் துறையின் தலைவராக பணி புரிபவர் பேராசிரியர் ஸ்டிபன் வால்ட்.  உலக நாடுகள் குறித்த இவரது கட்டுரைகளுக்கு வாசகர்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது குறிப்பிடத் தக்கது.   இவர் சமீபத்தில் அமெரிக்க ரஷ்யா உறவு குறித்து வெளியிட்டுள்ள கட்டுரை பலராலும் பாரட்டப்பட்டு வருகிறது.

அந்தக் கட்டுரையின் சுருக்கம் வருமாறு :

உலகத்தின் பலம் பொருந்திய நாடுகளில்  முந்தைய சோவியத் யூனியனும் அமெரிக்காவும் இருந்தன.   உலகின் சூப்பர் பவர் நாடுகள் என இரு நாடுகளும் அழைக்கப்பட்டு வந்தன.  இந்நாடுகளுக்கிடையே ஒரு மறைமுகப் பகை இருந்ததால் அப்போது இரு நாடுகளும் ஒன்றை ஒன்று கண்கணித்து வந்தன.   அப்போது இந்த நாடுகளுக்கிடையே ஒரு பனிப்போர் இருந்து வந்ததாக உலக நாடுகளிடையே கருத்துக்கள் இருந்தன.

அப்போதைய அமெரிக்காவுக்கு இங்கிலாந்து, ஜப்பான், பிரான்சு, இஸ்ரேல் போன்ற பல நாடுகளின் ஆதரவு இருந்தது.   அதே போல சோவியத் யூனியனுக்கு தெற்கு ஏமன், க்யூபா, அங்கோலா ஆகிய நாடுகளுடன் சீன அரசின் ஆதரவும் இருந்து வந்தது.   அதே போல இருநாடுகளுக்கும் பலம் பொருந்திய ராணுவம் இருந்தது.   அத்துடன் இரு நாடுகளும் அணு ஆயுதங்களையும் கையிருப்பில் வைத்திருந்தன.    அதனால் இரு நாடுகளுக்கிடையே அப்போது போர் மூண்டால் அது மூன்றாம் உலகப் போர் ஆகி இருக்கும் என அஞ்சப்பட்டது.

இதை நான் பனிப்போர் என அழைப்பேன்.   இப்போதுள்ள சூழ்நிலையில் இருநாடுகளுக்கிடையே பனிப்போர் இல்லை.  தற்போதுள்ள நிலையில் இரு துருவங்களாக எந்த நாடும் இல்லை.   அமெரிக்கா தற்போது முதலாம் இடத்தில் பலம் பொருந்தியதாக உள்ளது.  ரஷ்யா அப்படி இல்லை.   முன்பு சீனா ரஷ்யாவின் இளம் கூட்டாளியாக இருந்தது போய் இப்போது ரஷ்யா சீனாவின் இளம் கூட்டாளியாக உள்ளது.   பொருளாதாரத்தில் அமெரிக்க பொருளாதாரம் $20 ட்ரில்லியன் அளவுக்கு உள்ளது.  ஆனால் ரஷ்யாவின் பொருளாதார்ம வெறும்$2 ட்ரில்லியன் மட்டுமே.

தற்போது இரு நாடுகளுக்கும் இடையில் முன்பு போல் கடும் பகை இல்லை.   முன்பு சோவியத் யூனியன் கம்யூனிச நாடுகளில் முதன்மை வகித்ததைப் போல் தற்போதைய ரஷ்யா முதல் இடத்தில் கிடையாது.    சோவியத் யூனியன் உடைந்து இப்போது பல நாடுகளாகி அவற்றில் ரஷ்யாவும் ஒன்று என்னும் நிலையில் உள்ளது.

தற்போதைய நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மட்டுமே உள்ளார்.   அவர் நிரந்தர அதிபர் இல்லை என்பதால் அவருடைய பதவிக் காலம் முடிந்ததும் நிலைமை மாறி விடும்.   இவ்வாறு இருக்கும் போது அமெரிக்கா – ரஷ்யா ஆகிய நாடுகளிடையே பனிப்போர் என்பது கிடையாது எனத் தான் சொல்ல வேண்டும்

இவ்வாறு அந்தக் கட்டுரையில் குறிப்பிட்ப் பட்டுள்ளது.