மும்பை: மராட்டிய மாநிலத்தில், கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை என்றுள்ளார் அம்மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோப்.
அதுதொடர்பாக எழுந்த குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, “மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை என்று நினைக்கிறேன். மாநிலத்தில் தொற்று பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரையும் கண்காணித்து, அவருக்கு நோய் தொற்றிய காரணத்தைக் கண்டறியும் நிலையில் மாநில அரசு உள்ளது.
எனவே, எனது கருத்தின்படி, மாநிலத்தில் சமூகப் பரவல் என்ற நிலை இல்லை. பெரும்பாலான கொரோனா தொற்று நோயாளிகள், முன்னதாக நிறுவன தனிமைப்படுத்தல் & இல்ல தனிமைப்படுத்தலுக்கு உள்ளானவர்கள் மற்றும் சில தொடர்பு காரணிகளை உடையவர்கள்.
எனவே, மராட்டிய மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்று என்பது சமூகப் பரவலாக மாறவில்லை” என்றுள்ளார் அவர்.