மோடி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு: அதிமுகவின் நிலைப்பாடு…..?

டில்லி:

மோடி தலைமையிலான மத்திய பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை யில்லா தீர்மானம் கொடுத்துள்ளனர். இந்த தீர்மானத்தின்மீதான விவாதம் நாளை மக்களவை யில் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக  எந்தெந்த கட்சிகள் வாக்களிக்கும், எதிராக எந்தெந்த கட்சிகள் வாக்களிக்கும் என்பது குறித்து பரபரப்பான  தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில், அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து இதுவரை எந்தவித தகவலை யும் அதிமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், அதிமுக பாஜ அரசுக்கு ஆதரவாகவே வாக்களிக்கும் என்று நம்பப்படுகிறது.

ஏற்கனவே கடந்த 2003ம் ஆண்டு அப்போதைய மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதைத்தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போதுதான் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு எதிராக காங்கிரஸ் தலைமை யிலான எதிர்க்கட்சிகள், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி போன்றவை  நம்பிக்கை யில்லா தீர்மானத்திற்கு நோட்டீஸ் கொடுத்திருந்தன. இந்த நோட்டீசின் மீதான விவாதம் 20ந்தேதி  (நாளை) மக்களவையில் நடைபெறும் என்று பாராளுமன்ற சபாநாயகர் அறிவித்து உள்ளார்.

நாளை நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெற இருப்ப தால், அனைத்து கட்சி கொறடாக்களும்,  பாராளுமன்ற உறுப்பினர்களை நாளைய அவை நிகழ்ச்சியில் கட்டாயமாக கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவித்து உள்ளன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், பாஜக தலைமையிலான அரசு ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளுமா அல்லது வாக்கெடுப்பில் வீழுமா என்பது குறித்து பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதிரடி திருப்பங்களும் ஏற்பட்டு வருகின்றன.

பாஜகவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரும் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. திவாகர் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ள மாட்டேன் என்று அறிவித்து உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதேவேளையில் சமீபகாலமாக பாஜகவுக்கு எதிராக குரல்கொடுத்து வரும், பாஜக கூட்டணி கட்சியான சிவசேனாவும், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கலந்துகொள்ளாது என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், அதிமுக கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து பரபரப்பாக விவாதிக் கப்படுகிறது. மக்களவையில் 3வது பெரிய கட்சியான அதிமுகவின் வாக்குகள் எதிர்க்கட்சி களுடன் சேர்ந்தால், அது பாஜக அரசுக்கு ஆபத்தாக முடியும் என்பதால், அதிமுகவை மிரட்டி சரிக்கட்ட முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதன் எதிரொலியாகத்தான் தமிழக ஒப்பந்ததாரர் வீட்டில் நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை என்று கிசுகிசுக்கப்படுகிறது.

மேலும், தமிழகத்திற்க சாதகமாக காவிரி விவகாரத்தில் மத்திய அரசு உச்சநீதி மன்ற உத்தரவு படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உதவியது காரணமாக, அதிமுக பாஜகவுக்கு எதிராக வாக்களிக்காது என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக பாஜக அரசு எளிதாக தப்பித்துவிடும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.

தற்போது மக்களவையில் பாஜகவுக்கு  273 சீட்கள் இருக்கின்றன. இதுவே பெரும்பான்மை யானதுதான். இதன் காரணமாக பாஜக ஆட்சிக்கு எதிரான தீர்மானம் பிசுபிசுத்து போகும் என்று பாஜகவினர் நம்புகிறார்கள்.

ஆனால், அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, நேற்று பேசும்போது, ‘எங்களிடம் போதுமான வாக்குகள் இல்லையென்று யார் சொன்னது?” என்று டுவிஸ்ட் வைத்து பேசினார். இது பாஜகவினரின் புருவங்களை உயர்த்த வைத்துள்ளது.

இந்த நிலையில், மம்தா கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல் வெளியிடப்படவில்லை. ராஜ்யசபா துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினருக்கு பாஜக ஆதரவு அளித்தால், அந்த கட்சியும் மோடி அரசுக்கு சாதகமாகவே வாக்களிக்க வாய்ப்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

இதற்கிடையில், பாஜக கூட்டணி கட்சிளான அகாலிதள், பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகள் பாஜக அரசுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நாளை மோடி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடை பெற உள்ளது. இந்த வாக்கெடுப்பில் பாஜ அரசு பிழைத்துக்கொள்ளும் என்று நம்பப்படுகிறது.

மாநிலங்களவையில் மோடி அரசு மீதான விவாதம் வரும் 23ந்தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: no confidence motion on the Modi's government: what is the status in admk?, மோடி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு: அதிமுகவின் நிலைப்பாடு.....?
-=-