சோக்குமார் மரணத்தை அடுத்து தமிழ்த்திரையுலகில் பிளவு ஏற்பட்டிருப்பதுபோல் தோன்றுகிறது. அசோக்குமார் மரணத்துக்குக் காரணம் என்று சொல்லப்படும் ஃபைனான்சியர் அன்புவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று விஷால், ஞானவேல்ராஜா போன்றவர்கள் சொல்லிவர.. இன்னொரு பக்கம் சுந்தர் சி., சீனுராமசாமி, விஜய் ஆண்டனி, தேவயானி போன்றவர்கள் “அன்புச் செல்வன் நல்லவர்” என்று சொல்ல ஆரம்பித்தருக்கிறார்கள்.

இந்த சூழலில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் பைனான்ஸ் விளக்க கூட்டம் நடந்த்து. இதில் பேசிய தயாரிப்பாளர் டி.சிவா, “தமிழ் சினிமாவில் கந்து வட்டி என்பதே கிடையாது. இல்லாத ஒன்றை திரை உலகினர் சிலரே பேசுவது வருத்தமளிக்கிறது.

ஃபைனான்சியர் அன்பு மிக நல்லவர். ரஜினி முருகன் படத்துக்கு75% பணமும், மொட்டசிவா கெட்ட சிவா படத்துக்கு 60% பணமும் விட்டுக்கொடுத்தவர் அன்பு.

ஜி வி தற்கொலைக்கும் அன்புக்கும் சம்பந்தம் இல்லை என்று பஞ்சு அருணாசலமே தெளிவு படுத்திவிட்டார்.  அன்புக்கு தமிழ் இண்டஸ்டரி ஆதரவு, சினிமா இண்டஸ்ட்ரிக்கு அன்பு ஏ டி எம் மாதிரி” என்று பேசியிருக்கிறார்.