கவுண்டமணி, செந்தில் காமெடி ஜோடிக்கு பிறகு வடிவேலு, சந்தானம் விவேக் காமெடியில் கலக்கினர். தற்போது யோகிபாபு கோலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் சில்க் ஸ்மிதா இல்லாத படங்களே இல்லை என்ற நிலைபோல் தற்போது யோகிபாபு இல்லாத படமே இல்லை என்ற நிலையில் பெரும்பாலான படங்களில் அவர் நடிக்கிறார்.


யோகிபாபு பரபரப்பாக இல்லாமலிருந்த காலத்தில் நடித்த சில படங்கள் பெட்டிக் குள் முடங்கி இருந்தன. அந்த படங்களை தற்போது ரிலீஸ் செய்ய தயாராகிவிட் டனர். படத்தில் சில காட்சிகளில் யோகி பாபு நடித்திருக்கும் நிலையில் அந்த கதாபாத்திரத்தை படம் முழுக்க வருவது போல் மாற்றி அமைத்து ரிலீஸ் செய்கி றார்கள். யோகி பாபு நடிக்கும் ‘தெளலத்’ என்ற படம் ரிலீஸ் ஆகவிருப்பதாக விளம் பரம் வெளிவந்தது.
அதைக்கண்டு அதிர்ச்சியான யோகிபாபு. ’இந்த படத்தின் விளம்பரம் பார்த்தேன். எனக்கும் ’தெளலத்’ படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்,