ஜெ.வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவ கவுன்சில் விளக்கம்!

 

சென்னை:

றைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22 ஆம்  அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  நீர்ச்சத்து குறைபாடு, காய்ச்சல் காரணமாக  அவர், உடல் நலம் குன்றியதாக சொல்லப் பட்டது.  , 75 நாட்கள்  மருத்துமனையில் இருந்த அவர், சிகிச்சை பலனளிக்காமல் டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்த தாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே  ஜெயலலிதா மரணம் மற்றும் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து பல்வேறு யூகங்கள் பரவி வருகின்றன. இந்த நிலையில்,  இந்திய மருத்துவ கவுன்சில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து  இன்று விளக்கம் அளித்தது.

சென்னை தேனாம்பேட்டையில் இது தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் ரவிசங்கர் செய்தியாளர் களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது:

“முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த தவறும் ஏற்படவில்லை. சுமார் 32 மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.

வெளிநாடுகளில் இருந்து பலரும் சென்னை வந்து சிகிச்சை பெறுகின்றனர்.  அந்த அளவுக்கு இங்கே மருத்துவ வசதி மேம்பட்டுள்ளது. ஆகவே,  ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட  சிகிச்சையில் குறைபாடு என்கிற பேச்சுக்கே இடமில்லை.

ஜெயலலிதாவைப் பொறுப்பொறுத்தவரை..  நுரையீரல் தோற்று, இதய தோற்றுகள் உடல் முழுவதும் பரவ தொடங்கியது. உடல் உறுப்புகள் அடுத்தடுத்து செயலிழக்க ஆரம்பித்தது. ஆகவே திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதே அவரது உடல் நிலை மோசமாகவே இருந்தது.  அவருக்கு அப்பல்லோ, எய்ம்ஸ் மற்றும் லண்டன் மருத்துவர்கள் குழு  சிறப்பான சிகிச்சை அளித்தது.

சிகிச்சையின் போது அவரது ஒளிப்படங்களை வெளியாடாதது ஏன் என்று கேட்பதே தவறு. ஏனெனில் அந்த நேரத்தில் நோயாளியின் படத்தை வெளியிட எவருக்கும் உரிமை இல்லை. இன்னும் சொல்லப்போனால், ஒரு நோயாளிக்கு அளிக்கும் சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகள் குறித்து வெளியிடக்கூடாது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டமே சொல்கிறது. தவிர,  மருத்துவ விதிகளின்படி தனிநபர் அந்தரங்கம் பாதுகாக்கப்பட வேண்டும். இதனாலேயே  சிசிடிவி காட்சிகள் மற்றும் முழு சிகிச்சை விவரங்கள் வெளியிடப்படவில்லை’ என்று அவர் தெரிவித்தார்.

மேலும் அவர், “பொதுவாகவே உடல் பருமனாக இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. மேலும் ஜெயலலிதாவுக்கு   சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு போன்ற  இடர்ப்பாடுகளும் இருந்தன.  இப்படிப்பட்ட நிலையில் உள்ள நோயாளிக்கு  நீண்ட நாள் சிகிச்சை அவசியம். அதுதான் ஜெயலலிதா விசயத்திலும் நடந்தது. அந்த இடைப்பட்ட காலத்தில்  ஜெயலலிதாவின் உடல் உறுப்புகளுக்கு தோற்று பரவி இதயம் துடிப்பு நின்றது” என்று அவர் கூறினார்.

மேலும் அவர், “ மருத்துவத்துறை மீது அவநம்பிக்கை ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கில் தற்போது இந்த செய்தியாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை அரசியலாக்க வேண்டாம்”   என்று கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published.