கமல்ஹாசனுடன் ஒட்டுமில்லை உறவில்லை!: கௌதமி திட்டவட்டம்

 

மல்ஹாசனுடன்  எந்தவொரு தொடர்பும் இல்லை என்று கவுதமி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்துகொள்ளாமலே சேர்ந்து வாழ்ந்த நடிகர் கமல்ஹாசனமும் நடிகை கவுதமியும் பிரிந்ததாக அறிவித்தனர். இந்த நிலையில் இவர்கள் மீண்டும் இணைந்ததாக  தகவல் வெளியானது. இதை கவுதமி மறுத்துள்ளார்.

இது குறித்து தெரிவித்த அவர், “நடந்தது (பிரிவு) நடந்தத்தான். அதில் மாற்றமில்லை. பிரிந்ததற்கு வலுவான காரணங்கள் உள்ளன.

கமல்ஹாசனுடன் நான் தனிப்பட்ட  முறையிலோ தொழில் சார்ந்தோ இணைந்து இயங்கவில்லை. அதற்கு வாய்ப்பு இல்லை.

நான் ஆடை வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளேன். கமல் நடித்த படங்களிலும் அவர் தயாரித்த படங்களிலும் ஆடை வடிவமைப்பு செய்துள்ளேன். அதை மற்ற படங்களில் தொடர்வேன். ஆனால் கமலுடன் இணைந்து பணியாற்றப்போவதில்லை.

எனது மகளின் எதிர்காலம், அதற்கான நிதி நிலையைப் பெருக்குவது ஆகியவற்றில் தற்போது ஈடுபட்டுள்ளேன்.

கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபரில் நாங்கள் முறையாகப் பிரித்தோம். அதன் பிறகு எங்களுக்குள் எந்தவித தொடர்பும் கிடையாது “ என்று கவுதமி தெரிவித்துள்ளார்.