சென்னை:

காவிரி விவகாரத்தில், உச்சநீதி மன்ற தீர்ப்பு படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உச்சநீதி மன்ற உத்தரவை செயல்படுத்தாத மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழக அரசு தொடரும் என்று என எதிர்பார்த்த நிலையில்,  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத விவகாரத்தை மீண்டும் உச்சநீதிமன்றம் கொண்டு செல்ல இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், காவிரி பிரச்சினையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசை சார்ந்தது.  தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்தும் என்று 6 வார காலமாக காத்திருந்தோம், தமிழக அரசு சார்பாகவும், உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தி மத்திய அரசுக்கு அதிக அழுத்தம் கொடுத்தோம் என்றும் கூறினார்.

மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க எம்.பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்கினர் என்றும்,  காவிரி மேலாண்மை வாரியத்திற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது இருந்தாலும் காவிரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதி மன்றம் அமைக்க வில்லை.

இந்த விவகாரத்தை மீண்டும்  மீண்டும் உச்சநீதிமன்றம் கொண்டு செல்ல  இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார்,  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவதா என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.

இதன் காரணமாக தமிழக அரசு மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடராது என்பது தெள்ளத் தெளிவாகிறது. தமிழக விவசாயிகளை மத்திய அரசுடன் சேர்ந்து தமிழக அரசும் வஞ்சித்து வருகிறது என்று தமிழக அரசியல் கட்சியினரும், விவசாயிகளும் குற்றம் சாட்டி உள்ளனர்.