ஃபெர்குசனுக்கு கொரோனா தொற்று இல்லை – நிம்மதியாக தாயகம் திரும்பினார்!

வெலிங்டன்: நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஃபெர்குசனுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில், அந்நாட்டு அணிக்கெதிராக ஒருநாள் தொடரில் பங்கேற்றது நியூசிலாந்து அணி. இந்நிலையில், நியூசிலாந்து அணி வீரர் ஃபெர்குசனுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால், அவர் ஹோட்டல் அறையிலிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் நெகடிவ் என தெரியவந்தது. இதனால், அவர் நிம்மதியடைந்தார்.

“பல்வேறு நாடுகளில் விளையாடுவதால், சளி மற்றும் இருமல் அறிகுறிகள் ஏற்படுவது சகஜம்தான் என்பதை உணர்ந்தேன். ஆனாலும், முறையான மருத்துவப் பரிசோதனை அவசியம் என்று அறிவுறுத்தினார்கள். சிலர், அதை கொரோனா என்றும் பெரிதுபடுத்திவிட்டனர்.

தற்போது எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதால், உடனடியாக நியூசிலாந்து திரும்பிவிட்டேன்” என்றுள்ளார் ஃபெர்குசன்.