தமிழகத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையை அவர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ரூ. 136 கோடி மதிப்பீட்டில் இந்த சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. சிடி ஸ்கேன், எக்ஸ்ரே போன்ற அதிநவீன வசதிகள் உள்ளது.

அறுவை சிகிச்சை, தீவிர சிகிச்சை பிரிவுகள் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா நோயாளிகளின், மன அழுத்தம் போக்க பிரத்யேக யோகா மையம்அமைக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்காக 518 அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை தரப்படுகிறது.

தமிழகம் முழுவதும் 75,000 படுக்கை வசதிகள் உள்ளது.சென்னையில் 17500 படுக்கை வசதிகள் உள்ளது.தேவையான அளவு வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளது.

தமிழகத்திலேயே கொரோனாவால் குணமடைந்தவர்கள் 57.8 % ஆகும். சென்னையில் முழு ஊரடங்கு காரணமாக தொற்று குறைந்து வருகிறது. அரசின் முடிவுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. தமிழகத்தில் சமூக தொற்று ஏற்படவில்லை.

நோயை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு அவசியம்.சென்னையில் வீடுவீடாக சென்று மக்களை சந்தித்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை.

ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டிய அவசியம் உள்ளது. நோயை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். சென்னையில் வீடுவீடாக சென்று மக்களை சந்தித்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என்று கூறினார்.