கொரோனா தடுப்பு மருந்து 2020-க்குள் கிடைக்க வாய்ப்பில்லை: ஜெய்ராம் ரமேஷ் தலைமையிலான  நாடாளுமன்ற குழு தகவல்

டெல்லி:

ந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து ஆகஸ்டு 15ந்தேதிக்குள் உபயோகத்துக்கு வந்துவிடும் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தலைமையிலான  நாடாளுமன்ற தொழில்நுட்பகுழு,  கொரோனா தடுப்பு மருந்து 2020-க்குள் கிடைக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது 6வது கட்டமாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு ஜூலை 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இந்தியாவிலும் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் பல்வேறு நிறுவனஙகள் ஈடுபட்டு வரும் நிலையில், அகமதாபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு எழுதிய கடிதத்தில் கரோனாவுக்கான தடுப்பு மருந்தான கோவாக்ஸின் மருந்தை மனிதர்கள் மீதான கிளிக்கல் பரிசோதனை ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா அனுமதி அளித்திருந்தார். அதுபோல மேலும் ஒரு நிறுவனத்துக்கும் கொரோனா மருந்தை மனிதர்களிடம் சோதனை நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

இந்த சோதனையின் முடிவுகள் விரைவில் வெளியிட வேண்டும் என்றும், ஆகஸ்டு ட் 15-ம் தேதி, தடுப்பு மருந்து அறிமுகப்படுத்தபடும் என்றும் கூறப்பட்டது.

இதற்கு ஒரு தரப்பினர் வரவேற்பு தெரிவித்த நிலையில், மற்றொரு தரப்பினர் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், இந்த விவகாரத்திலும், மக்கள் நலனில் அக்கரை இல்லாமல் அனைத்து அரசியல் கட்சிகளும்  எப்போதும் போல அரசியல் செய்து வருகின்றன.

இந்த நிலையில், நாடு முழுவதும்  லாக்டவுன் அமல்படுத்தப்பட்டபின், முதல்மறையாக  நாடாளுமன்ற தொழில்நுட்ப நிலைக்குழு நேற்றுக் கூடியது.

இதில், நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ்,  நடந்த நிலைக்குழுவில் அதிகமான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என்றாலும், குறைந்த உறுப்பினர்களுடன் கூட்டம் நடைபெற்றது  மத்திய அறிவியல் மற்றும்தொழில்நுட்பத்துறை, உயிரிதொழில்நுட்பத்துறை, சிஎஸ்ஐஆர், அரசின் தலைமை அறிவியல் ஆலோசகர் ஆகியோர் பங்கேற்றனர்.

இதையத்து, கொரோனா தடுப்பு மருந்து குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெய்ராம் ரமேஷ்,  இந்த ஆண்டுக்குள் கொரோனா வைரஸுக்கு இந்தியாவில் தடுப்பு மருந்து கிடைக்க சாத்தியமில்லை.

அடுத்த ஆண்டு (2021)  தொடக்கத்தில்தான் தடுப்பு மருந்துக்கான வாய்ப்பு  கிடைக்கும்.  அது உள்நாட்டில் தயாரிக்கப்படுபவையாக இருக்கலாம், அல்லது உற்பத்தி செய்யப்படுபவையாக இருக்கலாம்.

இந்த கூட்டத்தில் குறைந்த விலையில் மருத்துவ உபகரணங்களைக் கண்டுபிடிக்க அறிவுறுத்தி  இருப்பதாகவும்,  ரூ.30 ஆயிரத்துக்குள் வென்டிலேட்டர்களை கண்டுபிடிக்குமாறு மருத்துவ நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஜெய்ராம் ரமேஷ் கருத்து குறித்து,  குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யநாயுடு பதில் தெரிவித்துள் ளார். அவரது டிவிட்டர் பதிவில்,  ‘ மார்ச் 23-ம் தேதிக்குப்பின் 3 மாதங்களுக்குப்பிறகு நாடாளுமன்ற நிலைக்குழு கூடியதை நான் வரவேற்கிறேன். அனைத்து உறுப்பினர்களும் தங்களின் கடமையைச் செய்ய ஆர்வமாக இருக்கிறார்கள், ஆனால், சூழல், தாமதத்தை ஏற்படுத்திவிட்டது. சமூக விலகலுடன் அடுத்தடுத்த கூட்டங்கள் நடத்த சாதகமான நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்தார்

முன்னாள் காங்கிர1 மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தலைமையிலான, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின்  30 எம்பிகளும் உறுப்பினர்களாக இருக்கின்றனர். ஆனால், நேற்றைய கூட்டத்தில் 6 உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

இதையடுத்து, ‘ வரும் 15-ம் தேதி உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கார்ட்டூன் கேலரி