சண்டிகர்:

ஞ்சாப் மாநிலத்தில் நாளை, மே 19ம் தேதி, திங்கள்கிழமை முதல் ஊரடங்கு உத்தரவை தளர்த்த உள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்த லாக்டவுன் மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் பேசிய அவர், குறைந்த அளவிலான பொதுப் போக்குவரத்துடன் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகளை எளிதாக்குவதுதான் 19-ஆம் தேதிக்கு பிந்தைய பிளான். ஆனால் பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என்று முதல்வர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், மே 18 முதல் அதிகபட்ச கடைகள் மற்றும் சிறு வணிக நிறுவனங்களை திறக்க அனுமதிப்போம். என்ன சேவைகள் அல்லது வணிக நிறுவனங்கள் திறக்க அனுமதிக்கப்படும் என்பது குறித்த முழு விவரங்களும் திங்கள்கிழமை வெளியிடப்படும். கட்டுப்பாடுகளை தளர்த்த அனுமதிக்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3-ஆம் தேதி முதல் மே 17 வரை மூன்றாம் கட்ட லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 17ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமையுடன், 3ஆவது கட்ட ஊரடங்கு நிறைவடைகிறது என்றபோதிலும், மீண்டும் அது நீட்டிக்கப்பட உள்ளது. சமீபத்தில் தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் மோடியும் இதை உறுதி செய்தார். இந்த நிலையில்தான், ஞாயிற்றுக்கிழமை 4-ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு குறித்து அறிவிப்பு வெளியாக உள்ளது.