டெல்லி: என்ஆர்சி குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தேசிய குடிமக்கள் பதிவேடு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். 2010ம் ஆண்டு இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது.

மீண்டும் இந்த ஆண்டான 2020ம் ஆண்டில் நடக்கிறது. இம்முறை தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட உள்ளதால் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந் நிலையில், தேசிய அளவில் குடிமக்களின் பதிவேட்டான என்ஆர்சி தயாரிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் என்.ஆர்.சி.யை அறிமுகப்படுத்த அரசுக்கு ஏதேனும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுதிய எழுத்துப்பூர்வ பதில் இதுவாகும்.

லோக் ஜனசக்தி கட்சி மற்றும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகளின் எம்பிக்கள் சந்தன் சிங் மற்றும் நாமா நாகேஸ்வர ராவ் ஆகியோரும் முறையே உள்துறை அமைச்சகத்திடம் விளக்கம் கோரியிருந்தனர்.

அந்தந்த மாநிலங்களில் என்ஆர்சியை நடைமுறைப்படுத்த மறுத்தது தொடர்பாக மாநில அரசுகளிடமிருந்து எந்தவொரு தகவலையும் அரசாங்கம் பெற்றுள்ளதா, அப்படியானால், இதுபோன்ற மாநில வாரியான விவரங்கள் கிடைத்ததா?என்றும் எம்பி.க்கள் கேட்டிருந்தனர். அதற்கு தான் இப்போது மத்திய அரசு பதில் அளித்துள்ளது.