சென்னை: இளநிலைப் பட்டப் படிப்புகளில், மாணாக்கர்களை சேர்ப்பதற்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட வேண்டுமென்ற பரிந்துரையை நிராகரித்து விட்டது பல்கலைக்கழக மானியக்கு குழுவான யுஜிசி.
ஹரியானா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குகாத் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி, இந்தப் பரிந்துரையை செய்திருந்தது.
பரிந்துரை அறிக்கையில் வெளியான அம்சங்களை ஆய்வுசெய்து, இந்தக் கல்வி ஆண்டுக்கான உத்தேச கால அட்டவணையை வெளியிட்டது யுஜிசி.
அதில், 12ம் வகுப்பு முடித்தோருக்கு நுழைவுத் தேர்வு நடத்தி, இளநிலை பட்டப்படிப்பில் சேர்க்க வேண்டும் என்று நிபுணர் குழு பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரையை நிராகரித்த யுஜிசி, முந்தைய ஆண்டுகளைப் போல், இளநிலை பட்டப் படிப்பில் மாணாக்கர்களை சேர்க்கலாம் என அறிவித்துள்ளது.
ஏற்கனவே, 3 ஆண்டுகளுக்கு முன்பு, இன்ஜினியரிங் படிப்பில் சேரும் மாணாக்கர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலான ஏஐசிடிஇ முன்வைத்தப் பரிந்துரையை, இதுவரை செயல்படுத்த முடியவில்லை.