அமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு புகாரில் முகாந்திரம் இல்லை! தமிழகஅரசு

சென்னை:

மைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு புகாரில் முகாந்திரம் இல்லை என்று தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலாளர் சென்னை உயர்நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி மீது, அறப்போர் இயக்க்ம மற்றும் திமுக சார்பில் ஊழல்  வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில்,  சென்னை, கோவை மாநகராட்சிகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்கான டெண்டர்களை தனக்கு வேண்டியவர்களுக்கு வழங்கியதன் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும்,  இந்த புகார் குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட கோரி அறப்போர் இயக்கம், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த  வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஹேமலதா  ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த ஓராண்டாக விசாரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி,  லஞ்ச ஒழிப்பு துறையின் விசாரணை அறிக்கையையும், 200 சாட்சிகளின் வாக்குமூலத்தையும் தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் சீலிட்ட கவரில் தாக்கல் செய்யப்பபட்டது. அதில் அமைச்சர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்றும் தெரிவித்திருந்தது. அதை பெற்றுக்கொண்ட நீதிபதிகள், எந்த விதிகளின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன், லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விசாரணை நடைமுறையின் படியும், லலிதா குமாரி, தெலங்கானா வங்கிபெட் சர்வேசுர ரெட்டி வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அளித்த வழிகாட்டுதல்களின்படியும் இந்த ஆரம்பகட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணைக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.

இந்த வழக்கில் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வக்கீல் சுரேஷ் ஆகியோர் சட்டரீதியான பல கேள்விகளை எழுப்பியிருந்தனர். அதற்கு பதில் அளிக்குமாறு நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு புகாரில் முகாந்திரம் இல்லை என்றும், அமைச்சர் வேலுமணி மீதான புகார் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க கோரிய வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும்  தமிழக தலைமைச் செயலாளர் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

கார்ட்டூன் கேலரி