எனது குடும்பத்துக்கும், ஆம் ஆத்மிக்கும் தொடர்பு இல்லை: கபில் குஜ்ஜாரின் தந்தை விளக்கம்

டெல்லி: எனது குடும்பத்தில் யாரும் ஆம் ஆத்மி கட்சியுடன் எந்த தொடர்பிலும் இல்லை என்று கபில் குஜ்ஜாரின் தந்தை கூறியிருக்கிறார்.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெறும் டெல்லி ஷாகீன் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்திய கபில் குஜ்ஜார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

அவருக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் ஆம் ஆத்மி கட்சியினர் இதனை மறுத்துள்ளனர். இந் நிலையில், எனது குடும்பத்தில் யாரும் ஆம் ஆத்மி கட்சியுடன் எந்த தொடர்பிலும் இல்லை என்று கபில் குஜ்ஜாரின் தந்தை கஜே சிங் கூறியிருக்கிறார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: எனக்கோ அல்லது எனது குடும்பத்தில் உள்ள எந்தவொரு உறுப்பினருக்கோ ஆம் ஆத்மி கட்சியுடன் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால் டெல்லி போலீசாரின் கூற்று வேறாக இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியின் பல மூத்த தலைவர்களுடன் கபில் குஜ்ஜரின் புகைப்படங்களை டெல்லி போலீசார் வெளியிட்டு உள்ளனர்.

கபில் குஜ்ஜரின் மாமா பதேஷ் சிங் என்பவர் கூறி இருப்பதாவது: இந்த புகைப்படங்கள் எங்கிருந்து பரவுகின்றன என்று எனக்கு தெரியவில்லை. எனது மருமகன் கபிலுக்கு எந்த அரசியல் கட்சியுடனும் எந்த தொடர்பும் இல்லை.

எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த வேறு எந்த உறுப்பினரும் இல்லை. எனது சகோதரர் கஜே சிங் சட்ட சபை தேர்தலில் போராடினார். 2008ம் ஆண்டில் ஒரு பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நின்று தோற்றார். அதன் பிறகு எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் எந்த அரசியல் கட்சியுடனும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: CAA Protest, Kapil Gujar, Shaheen Bagh, கபில் குஜ்ஜார், சிஏஏ போராட்டம், ஷாகீன் பாக்
-=-