டில்லி

கவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி கறுப்புப்பணத்துக்கு எதிராக எந்த ஒரு குற்றப்பத்திரிகையும் மோடி அரசால் பதியப்படவில்லை என தெரிய வருகிறது.

மல்டி ஏஜன்சி குரூப் என்னும் அரசுத் துறை நிறுவனம் கறுப்புப் பணம், வருமானத்தை மறைத்தல் ஆகியவைகளை கவனித்து வருகிறது.  அதற்கு தற்போது மத்திய நிதி அமைச்சர் தலைமை தாங்கி வருகிறார்.   பனாமா  பேப்பர்ஸ் தகவல் வெளிவந்த பின் கடந்த ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்ட இந்த நிறுவனம் முக்கியமாக வரி ஏய்ப்பு, அன்னிய முதலீடு, கறுப்புப் பணம் ஆகியவைகளை கண்காணிக்க மோடி தலைமையிலான மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டதாகும்.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இதுவரை இந்த மல்டி ஏஜன்சி குரூப் பதிந்த கறுப்புப் பணத்துக்கு எதிரான குற்றப்பத்திரிகைகளின் எண்ணிக்கை எவ்வளவு எனக் கேட்டு ஒரு மனு அளிக்கப்பட்டிருந்தது.  அதற்கு அளித்த பதிலில், “பனாமா பேப்பர்ஸில் குறிப்பிடப்பட்டுள்ளவைகளை கண்காணித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும் பணியை இந்த நிறுவனம் இதுவரை செய்து வருகின்றது.    இந்த நிறுவனம் அறிக்கைககளை அரசுக்கு அளிக்கும்.  ஆனால் குற்றப்பத்திரிகை பதியும் அதிகாரம் இதற்கு இல்லை.   இந்த நிறுவனம் அளித்த தகவலில் உள்ள கறுப்புப் பண குற்றவாளிகளின் மீது இது வரை ஒரு குற்றப்பத்திரிகயும் பதிவு செய்யப்படவில்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது.