டெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு உதவி செய்ததில், டெல்லி காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் எநத்வொரு மோசடியிலும் ஈடுபடவில்லை என நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை சார்பில் கிளின் சர்டிபிகேட் கொடுக்கப்பட்டு உள்ளது. ஸ்ரீனிவாஸ் பி.வி தன்னார்வ அடிப்படையிலேயே பிறருக்கு உதவி புரிந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், நோயாளிகளுக்கு மருத்துவனைகளில் படுக்கை கிடைக்காத நிலை உருவானது. தொடர்ந்து ஆக்சிஜன் பற்றாக்குறையும் எழுந்ததால், உயிரிழப்புகளும் கடுமையாக அதிகரித்தன. இது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மோடி அரசின் அலட்சியமே இதற்கு காரணம் என குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இதுதொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றமும் மோடி அரசை கடுமையாக சாடியது,.
இதற்கிடையில், தலைநகரில் காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகளை சேர்ந்த தன்னார்வலர்கள், நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன், மருந்துகள், படுக்கை வசதிகள் செய்து வந்தனர். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் நீதிமன்றத்திலும் எதிரொலித்து. அதைத்தொடர்ந்து, இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதையடுத்து, . சீனிவாஸைத் தவிர, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ திலீப் பாண்டே மற்றும் பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் மீதும் இதே போன்ற குற்றச்சாட்டுகளை டெல்லி போலீசார் விசாரித்து அறிக்கை தயார் செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
அதில், காங்கிரஸ் தலைவர் சீனிவாஸும் மற்றவர்களும் உண்மையில் யாரிடமும் கட்டணம் வசூலிக்காமல் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட கோவிட் தொடர்பான பொருட்களை தன்னார்வ அடிப்படையில் மக்களுக்கு வழங்கினால், இதில் எந்த முறைகேடும் நடைபெற வில்லை என்பது தெரிய வந்துள்ளது என்று தெரிவித்து உள்ளனர்.
மேலும், தங்களது, விசாரணையில் சீனிவாஸும் மற்றவர்களும் உண்மையில் யாரிடமும் கட்டணம் வசூலிக்காமல் மருத்துவ உதவி பெற மக்களுக்கு உதவுகிறார்கள் , முறைகேடு, மோசடி ஏதும் செய்யவில்லை. கொரோனா நோயாளிகளுக்கு தேவையான மருந்து பொருட்கள், ஆக்சிஜ%ன் “விநியோகம் மற்றும் உதவி தன்னார்வமாகவும், பாகுபாடின்றி” இருந்ததாகவும் தெரிலவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் சீனிவாஸ், காவல்துறையினரின் கேள்வியால் தாம் அச்சமடையவில்லை என்றும், இந்த நெருக்கடியின் எந்த நேரத்திலும் எந்தப் பகுதியிலிருந்தும் ஆதரவு இல்லாதவர்களுக்கு மட்டுமே உதவுவதாகவும் கூறினார்.
“மக்களிடையே விநியோகிப்பதற்கான நிவாரணப் பொருட்களை நான் எவ்வாறு பெற்றேன் என்பதை காவல்துறையினர் தெரிந்து கொள்ள விரும்பினர். நான் அவர்களின் உயிரைக் காப்பாற்ற மக்களுக்கு உதவுகிறேன் என்று சொன்னேன், ஐ.ஐ.சி (இந்திய இளைஞர் காங்கிரஸ்) இல் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களைக் கொண்ட ஒரு முழு குழுவும் எங்களிடம் உள்ளது. அவர்கள் மூலம் 24 மணி நேரமும் மக்களுக்கு உதவி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “நாங்கள் எங்கள் பணியைத் தொடர்கிறோம், காவல்துறையினருக்கோ அல்லது எந்த PIL க்கும் பயப்படவில்லை. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள், தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் அபாயகரமான வைரஸிலிருந்து காப்பாற்ற தீவிரமாக முயற்சிக்கும் மக்களுக்கு உதவுவதில் தவறில்லை என்றவர், காவல்துறை குழுவின் கேள்விகளுக்கு பதிலளித்ததாகவும், விரிவான எழுத்துப்பூர்வ பதிலை சமர்ப்பித்ததாகவும் சீனிவாஸ் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து கூறிய அகில இந்திய காங்கிரஸின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், நாடு முழுவதும் மக்களுக்கு உதவி தேவைப்படும் நேரத்தில், மக்களுக்கு உதவுவதற்கு பதிலாக “ரெய்டு ராஜ்” செய்வதன் மூலம் அரசாங்கம் தனது நேரத்தை வீணடிக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.