கொல்கத்தா: கொல்கத்தாவில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்தால் மட்டுமே பெட்ரோல் வழங்கப்படும் என்று மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.

இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கொல்கத்தாவில் டிசம்பர் 8ம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் வந்தால் பெட்ரோல் வழங்கப்படாது என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்த விதிமுறை அடுத்தாண்டு பிப்ரவரி 5ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. முன்னதாக சென்னையில் இந்த விதிமுறை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.