அமராவதி:

ரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் போட்டால்தான் வண்டிக்கு பெட்ரோல் போடப்படும் என்று ஆந்திர மாநில அரசு அதிரடியாக அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் சாலை விபத்துகளால் ஆண்டுக்கு லட்சகணக்கானோர் பலியாகி வருகின்றனர். இந்தியாவிலேயே சாலை விபத்துகளில் அதிக அளவில் உயிரிழப்பதில் தமிழகம் முன்னணியில் உள்ளது.

 

வாகன ஓட்டிகள் சாலை விதிகளை பின்பற்ற வலியுறுத்தி, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இருந்தாலும் விபத்துக்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

இந்நிலையில் சாலை விபத்துக்களை குறைக்கும் விதமாக ஆந்திர அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, இனி ஹெல்மெட் அணிந்தால் மட்டுமே பெட்ரோல் போடப்படும் என்று  அறிவித்துள்ளது.

இதன் காரணமாக சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புக்கள் குறையும் என்று எதிர்பார்ப்ப தாக கூறி உள்ளது.