06/07/2020: 7வது நாளாக உயர்வின்றி தொடரும் பெட்ரோல் டீசல் விலை…

சென்னை:
நாடு முழுவதும்  பெட்ரோல் டீசல் விலையில் இன்று எந்தவொரு மாற்றமும் நிகழவில்லை.  சென்னையிலும் நேற்றைய விலையே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் லிட்டருக்கு 83.63 ரூபாய், டீசல் லிட்டருக்கு 77.72 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 7 நாளாக எந்தவித விலை உயர்வுமின்றி இதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்தில் சுமார் ஒரு மாத காலம் பெட்ரோல் டீசல் விலை உயர்வில் மாற்றம் இல்லாமல் தொடர்ந்து வந்தது. ஆனால், தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, மீண்டும் பெட்ரோல் டீசல் விலை கடந்த ஜூ மாதம் முதல் உயர்த்தப்பட்டு வருகிறது.
ஆனால், ஜூலை மாதம் தொடக்கத்தில் இருந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வு இல்லாமல் ஒரே விலையே நீடித்து வருகிறது.
சென்னையில் கடந்த ஜூன் 29ம் தேதி, லிட்டர் பெட்ரோல், 83.63 ரூபாய்க்கு விற்பனையானது. டீசல் லிட்டர், 77.72 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த 7 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாத நிலையில், 8வது நாளாக இன்றும், விலையில் மாற்றமின்றி, அதே விலையிலேயே பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகின்றன.