டெல்லி: வரும் 14ம் தேதி பொதுவிடுமுறை இல்லை என்பதால் வேட்பு மனுக்களை பெற அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்பை எதிர்த்து திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் என்று ஆணையிட்டது.

இதையடுத்து, உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந் நிலையில் தேர்தல் ஆணையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

அதில் கூறி இருப்பதாவது: வேட்புமனுக்களை பெற வரும் 14ம் தேதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அலுவலகத்தில் இருக்க வேண்டும். 14ம் தேதி சனிக்கிழமை பொதுவிடுமுறை இல்லை. எனவே, அலுவலர்கள் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.