Random image

கர்நாடகா : நான்கு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட உரத் தொழிற்சாலை

பெங்களூரு

ர்நாடகாவில் அமைக்கப் போவதாக மத்திய அமைச்சரால் அறிவிக்கப்பட்ட  உரத் தொழிற்சாலைக்காக எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய பாஜக அமைச்சரவையில் ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சராக கர்நாடகாவை சேர்ந்த அனந்த குமார்  பதவி வகிக்கிறார்.   அவர் பதவி ஏற்ற வருடமான 2014 ஆம் வருடம் கர்நாடகாவில் உரத் தொழிற்சாலை ஒன்று அமைக்கப் போவதாக அறிவித்தார்.   ஆண்டுக்கு 13 லட்சம் டன் உர உற்பத்தி திறன் கொண்ட அந்த தொழிற்சாலை ரூ.5500 கோடி முதலீட்டில் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

அமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து அப்போதைய மாநில அரசு அதிகாரிகள் மத்திய உரத்துறை அமைச்சக அதிகாரிகளுடன் பல சுற்று பேச்சு வார்த்தைகள் நடத்தினார்கள்.   அதன் முடிவில் மூன்று இடங்கள் தொழிற்சாலை நடத்த முடிவு செய்யப்படது.  அவை தார்வாட், தாவன்கரே மற்றும் விஜய்புரா மாவட்டங்களில் அமைந்துள்ளன.   இது குறித்து மத்திய அமைச்சகத்துக்கு தகவல்கள் அனுப்பப்பட்டன.

அதற்குப் பிறகு உரத் தொழிற்சாலை குறித்து எந்த ஒரு தகவலும் வரவில்லை .  மாநில அரசு பலமுறை நினைவூட்டல் கடிதம் அனுப்பி உள்ளது.   ஆனால் எந்த ஒரு முன்னேற்றமுமிது குறித்து நடக்கவில்லை.

இது குறித்து அமைச்சர் அனந்த் குமார்  அலுவலகத்தில் விசாரித்த போது, “மாநில அரசு  அறிவித்த இடங்கள் குறித்து ஆய்வு நடந்து வருகிறது.  விரைவில் அந்த ஆய்வு முடிவடையும்.  அமைச்சர் கர்நாடகாவில் உரத்தொழிற்சாலை அமைப்பதில் உறுதியாக இருக்கிறார்” என தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் அனந்த குமார் இது குறித்து ஏதும் தகவல் அளிக்கவில்லை.