டில்லி

வுகானில் இருந்து வந்த 645 இந்தியர்களுக்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை என மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தாக்குதல் இருந்தது கண்டறியப்பட்டது.    அந்த தாக்குதல் சீனா முழுவதும் பரவியது.   இதுவரை ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சுமார் 563 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலகின் வேறு சில நாடுகளிலும் இந்த வைரஸ் தாக்குதல் பரவியதால் உலக சுகாதார நிறுவனம் அவசர நிலை பிரகடனம் செய்தது.   இந்தியாவைச் சேர்ந்த சுமார் 645 பேர் வுகான் நகரில் வசித்து வந்தனர்.  அவர்களை அழைத்து வர ஏர் இந்தியா சிறப்பு விமானங்களை அனுப்பி வைத்தது.

இந்த விமானங்களில் இந்தியாவைச் சேர்ந்த 645 பேர் அழைத்து வரப்பட்டனர்.   அவர்கள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டனர்.

சுகாதார அமைச்சகம் இன்று அளித்த தகவலில் இந்தியா வந்த 645 பேரில் யாருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை எனவும் தற்போது புதிய நோயாளிகள் யாரும் இந்தியாவில் கண்டறியவில்லை எனவும் தெரிவித்துள்ளது.