தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்யச் சொல்லவில்லை!! முதல்வர் எடப்பாடி பேட்டி

திருச்சி:

தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்யச் சொன்னதாக எந்த தகவலும் இல்லை என- முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருச்சி அருகே லால்குடியில் அமைச்சர் வளர்மதியின் மகன் திருமணம் நாளை நடக்கிறது. இதன் நிச்சயதார்த்த விழா இன்று நடந்தது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இதன் பின்னர் அவர் திருச்சியில் செய்தியார்களிடம் கூறுகையில், ‘‘ ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பண பட்டுவாடா தொடர்பாக தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்யச் சொன்னதாக எந்த தகவலும் இல்லை. ஆயிரத்து 519 ஏரிகளில் குடிமராமத்து பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்படுகிறது. எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகின்றன. 110 விதிகளின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன’’ என்றார்.

கார்ட்டூன் கேலரி