காலில் ‘முள்’தான் குத்தியது: சென்னை திரும்பிய ரஜினிகாந்த் தகவல்

--

சென்னை: 

ர்நாடக மாநிலம் புலிகள் சரணாலயத்தில் பியர் கிரில்ஸுடன் நடித்தபோது, தனது காலில் முள்தான் குத்தியது வேறு ஒன்றும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி புகழ் பியர் கிரில்ஜூடன்  நடிகர் ரஜினிகாந்த் நடித்த டாகுமென்டரி படத்தின் சூட்டிங், கர்நாடக மாநிலம் பந்திபுர்  வனவிலங்கு சரணாலயத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிக்கு காயம் ஏற்பட்டதாக நேற்று இரவு தகவல் பரவியது.

இந்த நிலையில், சூட்டிங் முடிந்து நள்ளிரவில் சென்னை திரும்பிய ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  ஷூட்டிங்கின்போது தமக்கு காலில் முள் தான் குத்தியது, காயம் எல்லாம் இல்லை,  சூட்டிங்கில் பெரிய விபத்து ஏற்பட்டதை போல வெளியான செய்தி தவறானது. புதரில் இருந்த முள்தான் காலில் குத்தியது  நான் நன்றாக இருக்கிறேன். முதல்கட்ட சூட்டிங் முடிந்ததால் சென்னை வந்துள்ளேன் என்று அவர் விளக்கம் அளித்தார்.

அடுத்த சூட்டிங்  வரும் 30ம் தேதி மீண்டும் நடைபெற உள்ளது. இதில் ரஜினிகாந்த் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.