அலுவல் மொழிகள் சட்டம் திருத்தும் எண்ணம் இல்லை: வைகோ கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

டெல்லி: அலுவல் மொழிகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் எண்ணம் இல்லை என மதிமுக எம்.பி. வைகோ எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில் தெரிவித்தார்.

பாராளுமன்ற மழைக்காலக்கூட்டத்தொடர் 14ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.  இன்றைய 3வது நாள் கூட்டத் தொடரின்போது, மாநிலங்களைவியில்,  இந்தி, ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளை அலுவல் மொழிகளாக மாற்றும் வகையில் அலுவல் மொழிகள் சட்டத்தில் திருத்தும் செய்யும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா? என்று மதிமுக பொதுச்செயலாளரும்,  மாநிலங்களவை உறுப்பினருமான  வைகோ கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் நித்தியானந்த ராய் இந்தி, ஆங்கிலம் தவிர பிற மொழிகளை அலுவல் மொழியாக்கும் திட்டம் இல்லை என்றும் அலுவல் மொழிகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் எண்ணம் இல்லை என்று கூறினார்.

கார்ட்டூன் கேலரி