உறவினர் மரணத்துக்கு கூட விடுமுறை இல்லை! :  சசிகலாவின் கெடுபிடியால் எம்.எல்.ஏக்கள் அதிர்ச்சி! 

அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களில் கணிசமானோர், அக் கட்சி பொதுச்செயலாளர் கட்டுப்பாட்டில் சென்னையை அடுத்த கூவத்தூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளரும், செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ-வுமான மோகனும் ஒருவர். இவரது  மாமா குப்புசாமி, நேற்று காலை இயற்கை எய்தினார்.

இந்தத் தகவலை மோகனுக்கு தெரிவிக்க குடும்பத்தினர் முயற்சித்தனர். ஆனால், அவர் உட்பட அ.தி.மு.க., எம்.எல்.ஏ-க்கள்  தங்கவைக்கப்பட்டிருக்கும் ‘கோல்டன் பே’ ரிசார்டில் ஜாமர்கள் பொருத்தப்பட்டிருப்பதால், தொடர்புகொள்ள முடியவில்லை.

பிறகு நேரடியாகா ஆளை அனுப்பி ஒருவழியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பதறி அடித்து, நேற்று மதியம் ஊருக்குச் சென்றார். அவருடன் சில அடியாட்களும் சென்றனர்.

அங்கு சுமார் அரைமணி நேரமே மோகன் இருந்தார். அதன் பிறகு அவரை வலுக்கட்டாயமாக அந்த அடியாட்கள் ஓட்டலுக்கு அழைத்து வந்துவிட்டனர்.

இதனால் மோகனும், குடும்பத்தினரும் மிகுந்த விரக்தியில் இருக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல, இந்த தகவலை அறிந்த மற்ற எம்.எல்.ஏக்களும் கடும் விரக்தியிலும் அதிருப்தியிலும் இருக்கிறார்கள்.