புது டெல்லி:
புதுடெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொதுமுடக்கம் அறிவிக்கப்படாது என்றும், அதே வேளையில் விரைவில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

கொரோனாதொற்று அதிகரித்து வரும் நிலையில் பல மாநிலங்களில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், புது தில்லியிலும் விரைவில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட உள்ளன. டெல்லியில் அதிகரித்துவரும் கொரோனாதொற்று பரவலால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தலைநகர் டெல்லியில் கொரோனாபரவலைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே இரவு நேரப் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், ஒரு வேளை நம்மிடம் தேவையான தடுப்பூசி இருந்து, வயது வரம்பு தளர்த்தப்பட்டால், 2 – 3 மாதங்களில் தில்லியில் தடுப்பூசி போடும் திட்டம் நிறைவு பெறும். தற்போது நம்மிடம் வெறும் 7 – 10 நாள்களுக்கு மட்டுமே போடும் அளவுக்கு தடுப்பூசிகள் உள்ளன. தடுப்பூசி போட வயது வரம்பை நீக்க வேண்டும். கொரோனாஅதிகரித்து வரும் நிலையில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது. புதிய கட்டுப்பாடகள் மட்டும் விரைவில் அறிவிக்கப்படும் என்று அறிவித்தார்.