எஸ்.பி.பி பற்றி பரவும் போலி தகவலால் குடும்பத்தினர் வருத்தம்.. மகன் சரண் வீடியோவில் உருக்கம்..

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அவரது உடல்நிலை திடீரென மோசமானது. தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர் சிகிச்சை, எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலி ருந்தும் மீண்டார்.
இந்நிலையில் அவருக்கு நுரையீரல் மாற்று சிகிச்சை நடக்க விருப்பதாக தகவல் பரவியது. எஸ்பிபி உடல்நிலை குறித்து இன்று எஸ்பிபாலசுப்ரமணியம் இன்று வெளியிட்ட வீடியோவில் கூறிய தாவது:

எனது தந்தை உடல்நிலை சீராக உள்ளது. சுயநினைவுடன் இருக்கிறார். மெதுவாக அதேசமயம் சீராக அவர் குணம் அடைந்து வருகிறார். பெரிய மாற்றம் என்று எதுவும் சொல்வதற்கில்லை. இன்னமும் அவருக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை, எக்மோ சிகிச்சை தொடர்கிறது.


சில நாட்களாக அப்பாவை பற்றி மீடியாக்களில் தவறான தகவல்கள் வெளி யாகி வருகிறது அது எங்கள் குடும்பத் தாரை வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அப்பாவுக்கு நுரையீரல் மாற்று சிகிச்சை நடக்க விருப்பதாகவும் அதற்காக பதிவு செய்து வைத்திருப்பதாகவும் கூறப் பட்டது, மேலும் அவர் மருத்துவமனை யிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டு வந்து விட்டதாகவும், ரசிகர்க்ளுக்காக அப்பா மருத்துவமனையிலிருந்து பாடுவதாகவும் செய்திகள் வந்தது. இந்த தகவல்களால் தொடர்ந்துஇ எங்களுக்கு போனில் அழைத்து பலரும் விவரம் கேட்கிறார்கள். எங்கிருந்து இப்படி போலி செய்தி இவர் களுக்கு கிடைக்கிறது என்று தெரிய வில்லை. இந்த தகவல்கள் எல்லாமே பொய்யானது. எந்த பெரிய விஷயமாக இருந்தாலும் அதை நான் அல்லது எனது பிஆர் ஒ நிகில் முருகன் அல்லது மருத்துவமனையிலிருந்துதான் வெளி யாகும். மீடியாக்கள் எங்கள் நிலைமை தயவு செய்து புரிந்துக்கொண்டு ஒத்து ழைப்பு தரவேண்டும்.
இவ்வாறு சரண் கூறினார்.

https://drive.google.com/file/d/1m6iixja-OBPsCbBo4gYsiAyaO97IF-_0/view?usp=drivesdk