Random image

மருத்துவ வசதி இல்லை: தொட்டில் கட்டி தூக்கிச் செல்லப்பட்ட கர்ப்பிணிக்கு வழியிலேயே குழந்தை பிறந்தது!

ஐதராபாத்:

ருத்துவ வசதியின்மையால் தொட்டில் கட்டி தூக்கிச் செல்லப்பட்ட கர்ப்பிணிக்கு பாதி வழியிலேயே குழந்தை பிறந்தது. அதைத்தொடர்ந்து தொப்புள் கொடி பிளேடால் அறுத்து எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

பொருளதாரத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக மார்த்தட்டிக்கொள்ளும் மத்திய அரசு,  இது போன்ற சம்பவங்கள் காரணமாக மக்களை ஏமாற்றி வருவது தெரிய வந்துள்ளது.

ஆந்திர பிரதேச மாநிலம் விஜயநகர மாவட்டத்தில் உள்ள மாசாகா கிராமம். இந்த கிராமத்திற்கு சரியான பாதை வசதிகோள, சுகாதார வசதிகளோ இதுவரை செய்யப்படாமல் உள்ளது. இதன் காரணமாக இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கடுமையான துயரத்தை சந்தித்து வருகின்றனர். மருத்துவ வசதி தேவைப்படுவோர் சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்துக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்த நிலையில் மசாகா கிராமத்தை சேர்ந்த நிறை மாத கர்ப்பிணி ஒருவருக்கு கடந்த 4ம் தேதி திடீரென பிரசவ வலி ஏற்ப்பட்டது. 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  மருத்துவமனைக்கு செல்ல போதிய சாலை வசதி இல்லாததால், கர்ப்பிணி பெண்ணை,   துணியில் உட்கார வைத்து தொட்டில் அமைத்து காட்டு பாதை வழியாக  அவரது உறவினர்கள்  தூக்கி சென்றனர்.

ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே அந்த கர்ப்பிணிக்கு வலி அதிகமாக குழந்தை பிறந்தது. இதனால் செய்வதறியாத கர்ப்பிணி பெண்ணின் உறவினர்கள், பிறந்த குழந்தையை தாயைவிட்டு பிரிக்கும் வகையில், இருவருக்கும் இடையேயான தொப்புள்கொடியை பிளேடு கொண்டு கத்தரித்தனர். அதைத்தொடர்ந்து வீட்டுக்கு திரும்பிய தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள், மருத்துவ காப்பீடு திட்டம் போன்ற பல்வேறு அறிவிப்புகளை அதிரடியாக வெளியிட்டு வரும் மோடி அரசு, சுகாதார வசதியின்றி ஏராளமான கிராமங்கள் தவிப்பதை கண்டுகொள்ளவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.