டில்லி:

மைச்சர் பதவி வழங்காததால் அதிருப்தியில் உள்ள அதிமுக, ஐக்கிய ஜனதாதளம் போன்ற கட்சிகளி  பாஜக கூட்டணியில் இருந்து விலகும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

17வது மக்களவை தேர்தல் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், பாஜகவும் தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. இதையடுத்து  மோடி தலைமையிலான 58 பேர்களை கொண்ட புதிய அமைச்சரவை நேற்று இரவு பதவி ஏற்றது.

இதில், கூட்டணி கட்சியான பீகாரின் ஐக்கிய ஜனதாதளம், தமிழகத்தின் அதிமுக போன்றவை கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சரவையில் வாயப்பு கொடுக்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி விலகும் என தகவல்கள் வெளியாகி  பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார்,  தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகவில்லை என்று தெரிவித்து உள்ளார்.

ஆனால் மோடி அமைச்சரவை பதவியேற்பு விழாவுக்கு இடையே செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிப்பதாகவும் மோடி அரசுக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.