புதுடெல்லி:

மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்படாததால், அதிமுக பெரும் அதிருப்தி அடைந்துள்ளது.


தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டும் வெற்றி பெற்றார்.

ரவீந்திரநாத் குமார் அல்லது அதிமுக ராஜ்யசபை உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் இணை அமைச்சர்கள் ஆவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மத்திய அமைச்சர்கள் பட்டியலில் அதிமுக பெயர் இடம் பெறவில்லை.  வைத்திலிங்கத்துக்கு ஆதவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளார்.

முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோருக்கு இடையே ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடே அதிமுகவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாததற்கு காரணம் என கூறப்படுகிறது.

இது குறித்து அதிமுக ராஜ்யசபை உறுப்பினர் நவநீதி கிருஷ்ணன் கூறும்போது, எனக்கு தெரிந்தவரை அதிமுகவை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். ஜெயலலிதா இருந்திருந்தால், இதுபோன்ற நிலை ஏற்பட்டிருக்காது என்றார்.

மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்படாததால், அதிமுக தரப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.