டில்லி,
லைநகர் டில்லி அருகே நொய்டா செக்டார் பகுதியில் இறந்தவரின் பிணத்துக்கு இறுதி சடங்கு செய்ய பணம் இல்லாததால் வங்கி முன் பிணத்தை வைத்து, இறந்தவரின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
டெல்லி அருகே நொய்டா செக்டார் 9 பகுதியை சேர்ந்தவர் முன்னிலால். அவர் மனைவி பூல்மதி தேவ.  இவர் கடந்த சில மாதங்களாக  புற்றுநோயால் கடுமையாக  பாதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி கடந்த திங்கட்கிழமை  காசியாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இறந்து போனார்.
அவரது இறுதி சடங்கை நல்லமுறையில் செய்ய அவரது மகன் யமுனாபிரசாத் விரும்பினார். அதற்கு தேவையான பணம் எடுக்க வங்கிக்கு சென்றார். ஆனால் வங்கியில் பணம் இல்லை என்று கூறியதால் செய்வதறியாது திகைத்தார்.

இறந்தவர் உடலுடன் வங்கி முன் போராட்டம்
இறந்தவர் உடலுடன் வங்கி முன் போராட்டம்

இந்த விவரம் யமுனபிரசாத்தின் உறவினர்களுக்கு தெரிய வந்தது. அவர்கள்  இறந்த பூல்மதியின் உடலை எடுத்து சென்று வங்கி முன் வைத்து போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த  சப்-இன்ஸ்பெக்டர் திலீப் சிங் பிஷ்த்,  தனது கையிலிருந்து 2000 ரூபாய் பணத்தை எடுத்துக் கொடுத்து இறுதி சடங்கு நடத்துமாறு கூறினார். மேலும், . இதுதவிர உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் தனது பங்கிற்கு 10000 ஆயிரம் பணம் கொடுத்து இறுதிச்சடங்கை செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
ஆனால் போராட்டம் நடத்திய உறவினர்கள் அந்த பணத்தை ஏற்க மறுத்து விட்டனர். அதற்கு பதிலாக தங்கள் சொந்த பணத்தை வங்கியிலிருந்து எடுக்க அனுமதி வழங்கும்படி கேட்டுக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து வங்கி அதிகாரிகளுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பதிலுக்கு வங்கி அதிகாரிகள் வங்கியில் தற்போது பணம் எதுவுமில்லை. மதியம் அவரது கணக்கிலிருந்து 15,000 ரூபாய் பணத்தை எடுத்துக் கொடுக்க முயற்சிக்கிறோம் என தெரிவித்தனர்.
ஒருவழியாக பிரசாத் வங்கியிலிருந்து பணத்தை பெற்றாலும் சூரியன் மறைந்து விட்டதால் தாயாரின் இறுதிச்சடங்குகளை அவரால் நேற்று செய்ய முடியவில்லை. இதனைத் தொடர்ந்து இன்று காலை பூல்மதி தேவியின் இறுதிச்சடங்குகளை அவரது குடும்பத்தினர் செய்து முடித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட மாஜிஸ்திரேட் என்.பி.சிங் கூறுகையில் “வங்கி ஊழியர்கள் பணத்தை வைத்துக்கொண்டு வேண்டுமென்றே தர மறுத்திருந்தால் அவர்களுக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இந்த சம்பவம் டெல்லி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது