‘கல்லாவ தொடச்சி வச்சி ஏமாற்றலாமா?’ திருட வந்த கடையில் திருடனின் குரங்குச்சேட்டை

நெய்வேலி:

டலூர் மாவட்டத்தில் ஒரு கடையில் திருட வந்த திருடன்,  அங்கு கல்லாவில் பணம் இல்லாத தால், விரக்தி அடைந்து, உயிரை பணயம் வைத்து திருட வந்தா.. கல்லாவ தொடைச்சி வச்சி என்னை ஏமாற்றலாமா?” இதுதான் குரங்குச்சேட்டை என்று எழுதி வைத்துள்ளார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள மந்தாரக்குப்பத்தில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் ஜெயராஜ். இவர்  இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். காலையில்  வந்து கடையை திறந்தபோது, கடையினுள் உள்ள  பொருட்கள் அனைதும் சின்னாப் பின்னமாக சிதறி கிடந்தன. மளிகை பொருட்கள் அடைக்கப்பட்டிருந்த பாக்கெட்டுக்கள் அனைத்தும் கிழிக்கப்பட்டு கடையே அலங்கோலமாக காட்சி அளித்தது. மேலும், கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்தது.

கடைக்குள்  சென்று பார்த்த ஜெயராஜூக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கிருந்த கல்லா உடைக்கப்பட்டிருந்த நிலையில், அருகில் இருந்த மூட்டை ஒன்றில், ” உயிரை பணம் வச்சு திருட வந்தா காசு இல்லாம கல்லாவை தொடச்சி வச்சி என்னை ஏமாற்றலாமா, அதுக்குதான் இந்த குரங்கு வேலை” என எழுதி வைத்துவிட்டு சென்றுள்ள்ளார்.

கல்லாவில் காசு இல்லாததால் ஏமாற்றமடைந்து, மூட்டையில் தனது ஆதங்கத்தை  திருடன் எழுதி வைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பையும், வியப்பையும்  ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, அருகிலுள்ள மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் பட்டுள்ளது. புகாரின் பேரில் திருடன் யார் என்பதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.