கார்களின் நம்பர் ‘பிளேட்டில்’ உரிமையாளரின் ஜாதிப்பெயரை எழுத உ.பி. அரசு தடை

 

லக்னோ :

காராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த பிரபு என்பவர், அண்மையில் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில், “உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கார்களின் நம்பர் பிளேட்டில், நம்பரோடு,உரிமையாளரின் ஜாதிப்பெயரையும் சேர்த்து எழுதும் கலாச்சாரம் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டி இருந்தார்.

தாங்கள் உயர் ஜாதியினர் என்பதை காட்டிக்கொள்ளும் வகையில் கார் உரிமையாளர்கள் இவ்வாறு எழுதுவதாக அந்த கடிதத்தில், குறிப்பிட்டிருந்த பிரபு, இதனை தடுத்து நிறுத்த வேண்டும்’’ என வலியுறுத்தி இருந்தார்.

இந்த கடிதத்தை மேற்கோள் காட்டி, உத்தரபிரதேச மாநில அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

“கார்களின் நம்பர் பிளேட்டில் ஜாதி பெயர்கள் இருந்தால், மோட்டார் வாகன சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உ.பி. மாநில போக்குவரத்து துறை, மாநிலம் முழுவதும் உள்ள ஆர்.டி.ஓ.க்கள் மற்றும் போலீசாருக்கு ஆணையிட்டுள்ளது.

– பா. பாரதி